ஆனைமலை புலிகள் காப்பகம் வனச்சரகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி கோட்டம், திருப்பூர் கோட்டம் உட்பட உள்ள 958 சதுர கிலோமீட்டர் வனபகுதியாகும், இப்பகுதிகளில் காட்டு யானைகள், புலி சிறுத்தை, கரடி,மான் இனங்கள் காட்டுமாடு கருஞ்சிறுத்தை உள்ளிட்ட அபூர்வக பாம்புகள் பறவை இனங்கள் உள்ளன, தற்போது கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில் வனப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வற்றி வருகிறது மேலும் வனவிலங்குகள் தாகம் தீர்க்க வனத்துறையினர் நீர்த்தேக்க தொட்டியில் அதிக அளவில் கட்டி உள்ளனர் தற்போது ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் போத்தமடை பீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது இதில் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள துணை இயக்குநர் பார்கவே தேஜா கூறுகையில் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது தற்போது கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் வனவிலங்கு இடம் பெயர்ந்து தண்ணீர் தேடி நீர் அதிக அளவில் வர கூடும், இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தாகம் தீர்க்க டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பப்படும் மேலும் வறட்சி தொடங்கியுள்ள நிலையில் வால்பாறை, டாப்சிலிப் செல்லும் சுற்றுலா பயணிகள் தீப்பற்றக்கூடிய பீடி சிகரெட் மதுபானங்கள் பொருட்கள் கொண்டு செல்ல தடை வைக்கப்பட்டுள்ளது எனவும் பிளாஸ்டிக் பொருட்கள் வனப்பகுதியில் கொண்டு செல்லாமல் இருக்க ஆழியார், சேத்துமடை வன சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.