அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Life Of Giving Foundation” சார்பாக இரண்டாம் ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள விளந்தை-ஆண்டிமடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, அழகாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, மருதூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கவரப்பாளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மேற்கண்ட நான்கு அரசு பள்ளிகளில் படிக்கும் 10ம்,12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருக்கும் 650 மாணவ-மாணவிகளுக்கு ரூபாய் 62,000 மதிப்பிலான கல்வி உபகரணங்கள்
வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்கள் ஆண்டிமடம் உதவி காவல் ஆய்வாளர் சரவணன் அவர்கள் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர், ஆசிரியர் பெரும்மக்கள் தலைமையிலும் மற்றும் அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர். கல்வி உபகரணங்களைக் கொண்டு நன்கு படித்து உயர்கல்வி செல்லவும் வாழ்க்கையில் முன்னேற்றமடையும் அனைத்து மாணவர்களும் பாடுபட வேண்டும் என்று மாணவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.