முருகனின் 4ம் படை வீடான தஞ்சை மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத
சுவாமி கோவிலில் இன்று தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. காலையில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து காவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் சண்முகர், வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் வந்து தீர்த்தவாரி கண்டருளினார்.
2ம் படை வீடான திருச்செந்தூருக்கு கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் காவடியுடன் பாதயாத்திரையாக வந்தனர். இன்று திருச்செந்தூர் நகரமே பக்தர்கள் கடலாக காட்சி அளிக்கிறது. கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கடலில் நீராடி தேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.