திருச்சி தீரன்நகர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோரையாறு அருகே ரோகிணி கேட்வே என்ற பன்னாடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் வளாகத்தில் தனி (வில்லா) வீடுகளும் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு சுற்றி ஆறு அடி சுற்றுச்சுவர் மற்றும் கம்பி வேலியுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோரையாறு கரையை ஒட்டி வரிசையாக 12 வீடுகள் அமைந்துள்ளன. இதில் 6ம் என் வீட்டில் அந்த குடியிருப்பின் நலச் சங்க தலைவர் முத்துசாமி என்பவரும், ஏழாம் என் வீட்டில் பொறியாளர் மகேந்திரன் என்பவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில், இந்த வீடுகளுக்கு பின்னால் உள்ள சுற்றுச் சுவர் கம்பி வேலியை வெட்டிவிட்டு சுற்றுச்சூவர் ஏறி குதித்த திருடர்கள் கடந்த சில நாட்களாக பூட்டி இருந்த 6 மற்றும் 7ம் எண் வீடுகளில் நகை மற்றும் பணம் உள்ளிட்டவை திருடி கொண்ட ஓடிவிட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கம்பி வேலியை வெட்டி … 2 வீட்டில் நகை-பணம் திருட்டு… திருச்சி அருகே பரபரப்பு
- by Authour
