முருகன் கோவில்களில் எல்லாம் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்/
தேரோட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் ,வர்த்தகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்க தேரை இழுத்தனர்.