Skip to content

மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியர் பலி…. திருச்சி க்ரைம்..

மின்சாரம் தாக்கி ரயில்வே பெண் ஊழியர் சாவு…

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் எம் ஆனந்த் (வயது 31) இவரது மனைவி லட்சுமி (வயது 34) ரெயில்வே ஊழியர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று லட்சுமி வீட்டில் இருந்த மின் மோட்டாரின் சுவிட்சை போட்டுள்ளார்.அப்போது எதிர்பாராத அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதையடுத்து உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று லட்சுமி உயிரிழந்தார்.இது குறித்து அவரது கணவர் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விருகின்றனர்.

சாலையில் மயங்கி விழுந்து பெண் பலி

திருச்சி காஜா பேட்டை மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார்.இவரது தாய் செல்வி (வயது 49)இவர் மெழுகுவர்த்தி விற்பனை செய்து வந்தார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் உயிரிழந்துவிட்டார். இதனால் வீட்டில் இருந்த செல்வி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் கடந்த 6ந்தேதி சுரேஷ்குமார் மற்றும் அவரது தங்கை இருவரும் காப்பாக்கத்தில் இருந்த தனது தாயாரை அழைத்து வந்தனர். அப்பொழுது அவர்கள் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்த போது செல்விந திடீரென்று மயங்கி விழுந்தார். இதைபடுத்து உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீர் நெஞ்சுவலி… பெயிண்டர் பலி…

திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய சுசிலா. இவரது மகன் ராபர்ட் அர்னால்டு (23)பெயிண்டர். திருமணமாகாத இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். கடந்த 8 ந்தேதி ஆலம் தெரு குட்செட் ரோட்டில் நடந்து செல்லும் போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அர்னால்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

error: Content is protected !!