செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக இருப்பவர் அருண் ராஜ். (இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திர பாண்டியனின் மகன்). இவருக்கும் மேகநாதன் -ஜெயந்தி தம்பதியரின் மகளான டாக்டர் கௌசிகாவுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அருண்ராஜ் -கௌசிகா திருமணம் இன்று காலை திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி கோவிலில் உள்ள உற்சவ மண்டபத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது. திருப்போரூர் முருகன் கோவில் அர்ச்சகர்களே இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த விழாவில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், மணமக்களின் நெருங்கிய உறவினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார். மாவட்ட ஆட்சியர் என்றாலும் முருகன் கோவிலில் மிக எளிமையாக இந்த திருமணம் நடைபெற்ற நிலையில் பலரும் அதனை ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட மக்களும் மாவட்ட ஆட்சியரின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.