கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியில் பகுதியில் வசித்து வருபவர் ஜெயந்தி கடந்த ஒரு வருட காலமாக தீபாவளி சீட்டு மற்றும் பிற சீட்டுகள் நடத்தி ஏராளமான பொதுமக்களை ஏமாற்றி உள்ளார் ஜெயந்தி சீட்டுக்காக பணம் வசூலித்த பிறகு சீட்டுக்குண்டான தொகையை சம்பந்தப்பட்ட அவர்களுக்கு வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் மேலும் இப் பகுதியில் கூலித்தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் ஜெயந்தி நம்பி ஏராளமானோர் பணம் கட்டியுள்ளனர் ஜெயந்தி மீது கிழக்கு காவல் நிலையம் மற்றும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கும் எடுக்கப்படவில்லை பொதுமக்கள் ஜெயந்தி இடம் சென்று பணம் கேட்டால் முறையாக பதிலளிக்காமல் மன உளைச்சல் ஏற்படுத்துகிறார் ஜெயந்தி மூன்று கோடிக்கு மேல் பணம் மோசடி செய்துள்ளார் எனவும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யாவிடம் மனு அளித்தனர் தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு சார் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க பொதுமக்கள் கூறினர்.
தீபாவளி சீட்டு…. ரூ.3 கோடி மோசடி செய்த பெண் மீது புகார்… கலெக்டர் அலுவலகம் முற்றுகை..
- by Authour
