கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருமாண்டக் கவுண்டனூர் பகுதியில் சுயம்புவாக உருவாகிய மணியாச்சி அம்மனை அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர் அம்மனை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறியதால் பக்தர்கள் அதிக அளவில் வந்து பூஜைகள் செய்து வழிபட்டனர் மணியாச்சி அம்மனுக்கு கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்த உள்ளதுநடத்த ஊர் பொதுமக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன பணிகள் முழுமை அடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது அதை
ஒட்டி வேள்வி மண்டபங்கள் அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் நடத்தப்பட்டது அதைத் தொடர்ந்து இன்று காலை மணியாச்சி அம்மன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் மற்றும் முருகன் கோபுர கலசங்களுக்கும் புனித நீரூற்றி நடத்தப்பட்டது விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்த கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது அதைத்தொடர்ந்து மணியாச்சி அம்மன் விநாயகர் முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.