உபி மாநிலம் பிரக்யாராஜில் கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி இந்த விழா தொடங்கியது. இதுவரை 40 கோடிக்கும் மேற்பட்டவர்கள் புனித நீராடி உள்ளனர். பிரதமர் மோடி , மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என ஏராளமானோர் தினமும் நீராடி வருகிறார்கள்.
இந்த நிலையில், கும்பமேளாவில் புனித நீராட ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரயாக்ராஜ் நகருக்கு இன்று வருகை தந்தார். பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த ஜனாதிபதியை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், , கவர்னர் ஆனந்திபென் படேல் மற்றும் மந்திரிகள் வரவேற்றனர். காலை 11 மணியளவில் திரிவேணி சங்கமத்திற்கு வந்த ஜனதிபதி அங்கு புனித நீராடினார்.இதனை தொடர்ந்து அவர் அக்ஷயவத் மற்றும் படே ஹனுமான் கோயிலிலும் பிரார்த்தனை செய்தார்.