கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர தர்ணா போராட்டம் மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமுல்படுத்த வேண்டும், ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியம் வழங்கிட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களில் பூர்த்தி செய்து இளைஞர்களுக்கு காலமுறை ஊதியம் நடைமுறையில் பணி வழங்கி நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள்,இந்திய தொழிலாளர் சங்கத்தினர் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.