ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அமோக வெற்றி பெற்றார். இன்று அவர் சென்னையில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள், அனைத்துக்கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர். பதவி ஏற்றதும் சந்திரகுமாருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சித்லைவர்களும் வாழ்த்து தெரிவித்து பொன்னாடை போர்த்தினர்.