கோவை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ,இங்கு பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளான வரையாடு,சிங்கவால் குரங்கு, மான்,யானை உள்ளிட்ட வனவிலங்கு வாழ்ந்து வருகின்றன.,
நிலையில் தற்போது நீர் நிலைகளில் வறட்சி காணப்படுவதால் தண்ணீரைத் தேடி யானை மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருகின்றன.,
அதேபோல் இன்று வனப்பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணத்துக்கடவு வடசித்தூர் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த மான் ஒன்று சுற்றி தெரிந்துள்ளது.,
இந்நிலையில் கிராம குடியிருப்புகளுக்கு அருகே உள்ள பகுதியில் புள்ளி மான் சுற்றித்திரிந்ததை அங்கு இருந்த வளர்ப்பு நாய்கள் ஒன்று கூடி மானை துரத்தி கடித்து தாக்கியதில் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு நடக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.,
இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் சுமார் ஐந்து வயது மதிக்கதக்க உயிரிழந்த புள்ளி மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.,
வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புகளுக்கு அருகே வந்த மான் நாய்கள் கடித்து கடித்து குதறியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.