திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த விபத்தில் பலத்த காயம் அடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊமச்சி வலசு பகுதியைச் சேர்ந்த குருராஜ் என்ற மாணவர் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். இதனடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் சம்மத்தித்தை தொடர்ந்து அவரது உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு அவரது உடல் எடுத்து வரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் செங்கப்பள்ளிக்கு அமரர் ஊர்தி மூலம் எடுத்து சென்றனர்.
கோவை… மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்….
- by Authour