கரூர் வெங்கமேடு அருகே உள்ள பெரிய குளத்து பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 60 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் அமைக்கும் பணி, வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் கூடுதல் நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் அமைப்பதற்கு 20 லட்சம் மதிப்பீட்டில் பணி மற்றும் தாந்தோன்றி மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க 20 லட்சம் மதிப்பீட்டில் பணி உள்ளிட்ட பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக பெரிய குளத்து
பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் அமைக்கும் பணிக்காக வருகை தந்த அமைச்சருக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர் பின்னர் பள்ளி மாணவ மாணவிகள் செல்பி எடுத்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ந்தனர்.