Skip to content

என் திரை வாழ்க்கைவின் சிறந்த பயணம் “‘விடாமுயற்சி” .. நடிகை திரிஷா நெகிழ்ச்சி..

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டார் அந்தஸ்தை கைவசம் வைத்துள்ளார். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித்தின் குட் பேட் அக்லி, சூர்யா 45 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான விடாமுயற்சி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் திரிஷா. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார்.

 இப்படத்தில் அஜித், திரிஷாவுடன் இணைந்து அர்ஜுன், ரெஜினா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.இந்த படத்தை நடிகை திரிஷா ரசிகர்களுடன் இணைந்து கண்டு மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் விடாமுயற்சி படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “என் திரை வாழ்க்கையின் சிறந்த பயணங்களில் விடாமுயற்சியும் ஒன்று. படக்குழுவினருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தான் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
error: Content is protected !!