கோவை, சிங்காநல்லூர் காமராஜர் சாலை பகுதியில் அமைந்து உள்ள மதலை முத்து அண்ட் சன்ஸ் என்பவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பெட்ரோல் பங்க்கில் கடந்த, 24.1.2025 காலை 37 DT 3467 என்ற பதிவு எண்ணை கொண்ட டி.வி.எஸ் ஸ்கூட்டர் வாகனத்தில் வந்த முருகன் என்ற வாடிக்கையாளரின் மேற்படி வாகனத்திற்கு, முனியப்பன் என்ற பணியாளரிடம் பெட்ரோல் போட கேட்டு பெட்ரோல் நிரப்பி கொண்டு இருந்த போது, நிரம்பும் பெட்ரோல் டேங்கில் இருந்து நாசில் வழியாக திரும்ப எதிர் ஏறி, எரிபொருள் சிந்தி விடக் கூடாது என்பதற்காக, சென்சார் பம்ப்பை ஓரிரு முறை நிறுத்தி விட்டதால், வாடிக்கையாளர் முருகன் அதனை தவறாக புரிந்து கொண்டு, பெட்ரோல் நிலைய பணியாளர் அவரை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு பணியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்தும் உள்ளனர். மேலும் அவரது நண்பர்களை அழைத்து வந்து பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த லாரியின் கிளீனர் சக்திவேல் என்பவரை கண் மூடித்தனமாக தாக்கியும் கீழே தள்ளி விட்டு படுகாயம் அடைந்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறு அடிக்கடி கோவை மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் நிலைய பணியாளர்களை தாக்குவதால், பணியாளர்களுக்கு உயிர்ப் பாதுகாப்பும், . தொழில் பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே இதை போன்று சம்பவங்கள் நடக்கும் போது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் கோவை மாவட்ட பெட்ரோல், டீலர் அசோசியேசன் சார்பில் சி.சி.டி.வி கேமரா காட்சிகளைக் கொண்டு புகார் மனு அளித்து உள்ளனர்.