Skip to content

ஈரோடு கிழக்கு.. 3ஆம் சுற்றில் திமுக 19, 196 வாக்குகள் முன்னிலை

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்., கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் காலமானதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ., தே.மு.தி.க., கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. காங்., தொகுதியை பறித்து, வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக தி.மு.க., நிறுத்தியது. நா.த.க., சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் என, 46 பேர் போட்டியிட்டனர். பிப்ரவரி 5ம் தேதி, அமைதியான முறையில் ஓட்டுப் பதிவு நடந்து முடிந்தது. மொத்தம் 72% ஓட்டுக்கள் பதிவாகின. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. மொத்தம் 17 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன. தற்போது, 3ம் சுற்று முடிவில், தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் 22, 356 ஓட்டுக்களும் சீத்தாலட்சுமி 3, 160 வாக்குகள் பெற்றுள்ளார். 3ம் சுற்று இறுதியில் திமுக 19, 196 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது.

error: Content is protected !!