குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயணம் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வினா விடை வங்கியினை எம்எல்ஏ வழங்கினார்
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 10 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் பயிற்சி வினா விடை வங்கி புத்தகம் வழங்கப்படுகிறது. அதன்படி குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை அரசு
ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10, 12ம் வகுப்பை சேர்ந்த 316 மாணவர்களுக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10,12ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு இலவச பயிற்சி வினா வினா விடை வங்கி புத்தகத்தினை எம் எல் ஏ மாணிக்கம் வழங்கினார்
இலவச வினா விடை வங்கி புத்தகத்தை பெற்றுக்கொண்ட மாண மாணவிகள் அமைச்சருக்கும் எம்எல்ஏக்கும் நன்றியை தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் இலவச வினா விடை வங்கி புத்தகத்தினை வழங்கினார்
இந்நிகழ்வில் குளித்தலை சேர்மன் சகுந்தலா பல்லவி ராஜா, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி, திமுக குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமர், கிழக்கு ஒன்றிய செயலாளர் புழு தேரி அண்ணாதுரை, நங்கவரம் பேரூர் முத்து உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருபால் ஆசிரியர் பெருமக்கள் பலரும் உடன் இருந்தனர்