Skip to content

திருச்சியில் என்.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு புதிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்யக்கோரி டி. ஆர். இ. யூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் பழைய பென்ஷன் திட்டமே தொடர வேண்டுமென வலியுறுத்தியும் புதிதாகக் கொண்டு வரப்பட்ட என்.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் ரயில்வே பணிமனை முன்பு பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை தொழிற்சங்கமான டி.ஆர்.இ.யூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உதவி கோட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார். உதவி பொதுச் செயலாளர் சந்தான செல்வம், பணிமனை கோட்டத் தலைவர் லெனின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தின் போது நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள், ரயில்வே தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நிர்வாகி ராஜசேகர் நன்றி கூறினா

error: Content is protected !!