திருச்சி , மணல் வாரித் துறை ரோடு சங்கிலியாண்டபுரம் பகுதியில் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த ஒரு பார்சலில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை யடுத்து பாலக்கரை போலீசாருக்கு கூரியர் நிறுவன ஊழியர்கள் தகவல் அளித்தனர். தகவலின் போலீசார் வந்து சோதனை செய்தனர். சோதனையில் போதை மாத்திரை இருப்பது உறுதியானது.
அதைத் தொடர்ந்து போலீசார் போதை மாத்திரையை வாங்க வரும் ஆசாமிகளை கைது செய்ய கண்காணித்தனர். அதன்படி போதை மாத்திரையை வாங்க வந்த புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி (வயது29) சந்தோஷ் (வயது 26 )ஆகிய இருவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். மேலும் பார்சலில் வந்த தடை செய்யப்பட்ட 100 போதை மாத்திரைகள் ஊசி ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் அந்த நபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.