டில்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 தங்கபதக்கங்கள் வென்று கோவை திரும்பிய ஆண்ட்லி கிக் பாக்சிங் அகாடமி மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.. வாக்கோ இந்தியா சார்பில் 4 வது சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி டில்லியில் நடைபெற்றது.
இதில் துருக்கி,ரஷ்யா,பிரிட்டன்,மலேசியாஇந்தியா,என பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டிகளில் இந்தியா சார்பாக கோவையில் இருந்து துடியலூர் என்.ஜி.ஜி.ஓ.காலனி பகுதியில் உள்ள ஆண்ட்லி கிக் பாக்சிங் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் மன்சர், கிஷோர்,சஞ்சய், டிவின், மற்றும் சபரி என ஐந்து பேர் பங்கு பெற்றனர்..
இதில் பாய்ண்ட் ஃபைட்,மியூசிக்கல் ஃபார்ம்ஸ்,கிக் லைட் உள்ளிட்ட பிரிவுகளில் கலந்து கொண்ட ஐந்து பேரும் எட்டு தங்கம் இரண்டு வெள்ளி என 10 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு துடியலூர் என்.ஜி.ஜி.ஓ.காலனி பகுதியில் ஆண்ட்லி கிக் பாக்சிங் அகாடமி முன்பாக உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது..
சர்வதேச அளவில் சாதித்த மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆண்ட்லி ப்ளோக் பெல்ட் அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்லி ஆனந்த் மற்றும் பயிற்சியாளர்கள் அபிஷேக்,சிங்கத்தமிழன் ஆகியோருக்கு பெற்றோர்கள்,பொதுமக்கள் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்..
இதில் பேசிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்லி தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த விளையாட்டிற்கு நல்ல ஊக்கம் அளித்து வருவதாகவும்,விளையாட்டு வீர்ர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்கினால் இன்னும் பல போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்..