கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு மற்றும் மாவட்ட தொழிலாளர் நல வாரியம் இணைந்து கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள்,நீதிமன்ற பணியாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். தொடர்ந்து கரூர் மாவட்ட தொழிலாளர் துறை சார்பில் கொத்தடிமை
தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். அதனை தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க ஆட்சியர் அலுவலக அலுவர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.