திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று அளித்த பேட்டி:
மணப்பாறை அருகே பள்ளியில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சம்பவத்தில் யார் ஈடுபட்டாலும் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும். பள்ளியில் என்ன நடந்தாலும், மாணவ, மாணவிகள் தைரியமாக சொல்ல வேண்டும். அப்போது தான் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
இததுபோன்ற பாலியல் குற்றங்கள் மேற்கொண்டு நடைபெறாமல் தடுக்க விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும். பள்ளிகளில் இதற்காக விழிப்புணர்வு கிளப்கள் தொடங்கப்படும்.
மணப்பாறை பள்ளியில் இது தொடர்பான மேலும் தடயங்கள் கிடைக்கிறதா என்பதை சேகரிக்கவே இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திங்கட் கிழமை வழக்கம் போல பள்ளி செயல்படும்.
குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்ப்பட்டு உள்ளது. அது வேஸ்ட் புட் பாக்கெட் தான். மேலும் அது குடிநீர் தொட்டியும் அல்லை. அதனை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி விட்டனர். தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோரின் ஐடியை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பஞ்சப்பூர் புதிய பஸ் நிலைய பணி இந்த மாத இறுதியில் முடியும் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடிவடையும். அதன்பிறகு முதல்வரின் தேதி கிடைத்தவுடன் பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.