Skip to content

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை- உச்சநீதிமன்றம் கருத்து

மசோதா ஒப்புதல்  தர இழுத்தடிப்பு  விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணை 2 நாட்களாக நடந்தது. முதல்நாள்(4ம் தேதி) தமிழக அரசு சார்பில் விவாதங்கள் நடந்தது. நேற்று(6ம்தேதி)  ஆளுநர் தரப்பு  விவாதம் நடந்தது.  நேற்று நடந்த விவாதம் வருமாறு:

நீதிபதிகள்: ஆளுநர் பதவியை, அவரது அதிகாரத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஏன் 12 மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்றுதான் கேட்கிறோம். 2 மசோதாக்களை ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்? 10 மசோதாக்கள் மீது ஏன் முடிவெடுக்க மறுத்தார்? என்பதுதான் கேள்வி.

நீதிபதிகள்: அரசு மறுபடியும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் போது மசோதாக்களை ஆளுநரால் நிறுத்திவைக்க முடியுமா?

ஆளுநர் தரப்பு: ஆளுநர் மசோதாவை திரும்ப அனுப்பினால் அதனை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றுமனால் அது சட்டமாகிவிடும், பல்கலை. துணை வேந்தர் என்பது ஒரு மிக முக்கிய பொறுப்பு, அதனை அரசு மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்களா?

நீதிபதிகள்: அரசு என்ன செய்ய முன்வருகிறதோ அது ஆளுநருக்கு பிடிக்கவில்லை என்றால் அது அவருடைய சொந்தக் கருத்துதானே?

ஆளுநர் தரப்பு: தமிழ்நாடு அரசு மறைமுகமாக நீதிமன்றத்தின் மூலம் தங்களது மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோருகிறார்கள்.

நீதிபதிகள்: நாங்கள் கேட்பது, அனைத்து மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் வாய்ப்பு இருந்தபோது, ஏன் 2 மட்டும் முதலில் அனுப்பினார்? என்பதைக் கூறுங்கள். ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நிறுத்தி வைத்தார் (with hold) என்றால் அது எந்த பிரிவின் படி?,

அரசியல் சாசனம் 200 அல்லாமல் வேறு ஏதேனும் விதிமுறை உள்ளதா?.  ஆளுநர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவு எடுத்துள்ளார். எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது.  ஆளுநர் ஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். 10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்ததற்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை  7ம் தேதிக்கு  ஒத்தி வைத்தனர்.

அதன்படி இன்று காலை 11 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.  அப்போது நடந்த  வாதங்கள்  வருமா”

நீதிபதிகள்:  கவர்னர் ஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்தார்.  அவர்  ஜனாதிபதிக்கு ஏன் 2 மசோதாக்களை அனுப்பினார்.  ஜனாதிபதி ஏன் முடிவு எடுக்கவில்லை என்ற  கேட்கமுடியுமா?

கவர்னர் தரப்பு:  மசோதாக்களில் முரண்பாடுகள் இருந்ததால்  கவர்னர் நிறுத்தி வைத்தார். சட்ட முரண்பாடுகள் இருந்தால்  அந்த மசோதாவை  நிறுத்தி வைக்கும் அதிகாரத்தை கவர்னர் கொண்டுள்ளார்.

நீதிபதிகள்:  முரண்பாடுகள் இருந்தால்  கவர்னர், அரசுக்கு சுட்டி காட்டி இருக்க வேண்டும்.

கவர்னர் தரப்பு: துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவில் யுஜிபி பிரதிநிதியை ஏற்க  தமிழக அரசு தயாராக இல்லை. அரசு  அனுப்பி உள்ள  7 மசோதாக்கள், பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து  மாற்றுவதாக உள்ளது

நீதிபதிகள்: மசோதாக்களில் உள்ள முரண்பாடுகளின் முட்டுக்கட்டைக்கு எப்படி தீர்ப்பது, யார் தீர்ப்பது?  மசோதாக்கள் சட்ட முரண்பாடுகளுடன் இருப்பதை அரசுக்கு ஏன் தெரிவிக்கவில்லை. ?

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர கவர்னருக்கு அரசமைப்பு சட்டம் வேறு வாய்ப்பு வழங்கவில்லை.  மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டு அதை  ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியுமா? மசோதாக்கள் முரண்பாட்டுடன் உள்ளது என ஜனாதிபதிக்கும் கவர்னர் தெரிவித்திருக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.  அதைத்தொடர்ந்து  மதியம் 12.45 மணிக்கு வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு  தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  எனவே 10ம் தேதி மீண்டும் இந்த வழக்கின் விசாரணை  தொடர்ந்து நடைபெறும்.

error: Content is protected !!