பனிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம், பசுபதிபாளையம், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளிலும்
குறிப்பாக கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனி பொழிவு இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் அதிகப்படியான பனிப்பொழிவின் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு இருப்பதால் கனரக வாகனங்களை சற்று நேரம் நிறுத்தி வைத்து, பின்பு செல்கின்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.