Skip to content

திருப்பதி சென்றவர் வீட்டில் சிலை திருட்டு- திருச்சியில் துணிகரம்

திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (61) இவர் கடந்த  2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது, உள்ளே சென்று பார்த்தபோது உள்ளிருந்த இரண்டு அடி உயர செம்பு சாமி சிலை, இரண்டு குத்து விளக்கு, ஒரு தங்கமுலாம் பூசிய தட்டு, இரண்டு தங்க காசுகள் திருட்டு போனது தெரிய வந்தது இது குறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

error: Content is protected !!