Skip to content

காடுவெட்டி குருவிற்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக கோஷம்… 3 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் சிலை திறப்பின் போது, திமுகவிற்கு எதிராக கோஷமிட்டு வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக பாமகவை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவரும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ஜெ. குருவின் பிறந்த நாளை ஒட்டி, அவரது முழு உருவ வெண்கல சிலையை அவரது தாயார் கல்யாணி திறந்து வைத்தார். குருவின் மகனும், மாவீரன் மஞ்சள் படையின் தலைவருமான கனலரசன், குருவின் மகள் மற்றும் மருமகன், மற்றும் திரளான தொண்டர்கள் குருவின் திருவுருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, குருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கிருந்த சிலர் திமுகவிற்கு எதிராகவும், 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வன்முறையை தூண்டும் வகையில் கோசமிட்டதாக மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப் புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பாமகவை சேர்ந்த விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த சிங்கார வேலன், வளையமாதேவி பகுதியைச் சேர்ந்த அன்புமணி மற்றும் சீனிவாசன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!