தமிழில் ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘மல்லுக்கட்டு’, ‘கந்தர்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹனி ரோஸ். தெலுங்கில் வீரசிம்ம ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்து, தற்போது ஆந்திராவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி உள்ளார். இந்த நிலையில் கேரள மாநிலம் மன்னார்காட்டில் ‘மைஸி பியூச்சர்’ என்ற புதிய வீட்டு உபயோகப் பொருட்கள் கடையைத் திறக்க சிறப்பு விருந்தினராக ஹனி ரோஸ் சென்றார். இதையறிந்து சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் குவிந்தனர். கூட்டத்தை பார்த்த பவுன்சர்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். கடையை திறந்துவிட்டு ஹனிரோஸ் காரில் திரும்ப கிளம்பினார். அப்போது செல்பி எடுக்க ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இதனால் போலீசார் மற்றும் பவுன்சர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க ரசிகர்களை தடுக்க முடியவில்லை.சிலர் அவர் மீது விழுந்தனர். இருந்தும் அவர் பவுன்சர்களின் உதவியுடன் காரில் ஏறி சென்றார். அந்த வீடியோவை ஹனி ரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Tags:பிரபல நடிகை