உழவர் பெருந்தலைவர் சி.நாராயணசாமி நாயுடுவின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு,ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், கோவை,வையம் பாளையத்தில் அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தில் உள்ள நாராயணசாமி நாயுடுவின் திருவுருவச் சிலைக்கு,
தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மாவட்ட பொறுப்பு அமைச்சர்.வி.செந்தில்பாலாஜி ,
தமிழ்நாடு செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்,
வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி,
தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோரும் கலந்து கொண்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி,ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் திமுக நிர்வாகிகள், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்,
தலைமைக்கழக நிர்வாகிகள்,தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,
நகரக்கழக, ஒன்றியக்கழக, பகுதிக்கழக,பேரூர்க்கழக, வட்டக்கழகச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள்,நகர,ஒன்றிய, பகுதி,பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள்,BLA-2 நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.