Skip to content

கோவை மருதமலை முருகன் கோவிலில் தேர் திருவிழா … கொடியேற்றத்துடன் தொடங்கியது..

கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப் பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 11 – ந் தேதி 12.10 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது.

கோவை, மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று தொடங்கியது.

அதிகாலை கோ பூஜை செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்பட்டது. சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. சுவாமிக்கு முத்தங்கி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் சேவல் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தைப்பூச தேரோட்டத்திற்கான முகூர்த்தக்காலும் நடப்பட்டது. விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி அன்னவாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. மாலை 4 மணிக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. வருகிற 10-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. திருக்கல்யாணம் முடிந்ததும் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் கண்ணாடி மஞ்சத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேர்த் திருவிழா 11-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பாதயாத்திரை வரும் பக்தர்கள் விடிய, விடிய சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

error: Content is protected !!