கரூர் அரசு காலணி அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இன்று கரூர் எஸ்பி அலுவலகம் வந்து அவர்கள் புகார் மனு கொடுத்தனர். இந்த புகார் குறித்து அவர்கள் கூறியதாவது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர், நாங்கள் அங்கு தொழில் செய்ய சென்ற பொழுது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு சில மாதங்கள் கழித்து எங்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்த அவர் எங்களை சேமிப்பு சீட்டில் சேர சொன்னார். அதற்கு முதலில் நாங்கள் மறுத்தோம். ஆனால் அவர் நீங்கள் கட்டும் பணத்திற்கு இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கள் பகுதியை சேர்ந்த 10 குடும்பத்தினர் ,மாத மாதம் பத்தாயிரம், பதினைந்து ஆயிரம் என கட்டி வந்தோம். கொரனா காலத்தில் கட்ட முடியாமல் இரண்டு வருட இடைவெளி ஏற்பட்டது. அந்த பணத்தையும் சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் பகுதிக்கு செல்வகுமார் வந்து, ஒரு 7 லட்சம் வரை வசூல் செய்து சென்று விட்டார். நாங்கள் எங்கள் பணத்தை திருப்பி கேட்டதற்கு அலைகழித்து வந்தார்.
நாங்கள் அவர் ஊருக்கு சென்று கேட்டபோது எங்களை மிரட்டினார். இங்குள்ள போலீசாருக்கு பணம் கொடுத்து வருகிறேன் என்னை ஒன்றும் செய்ய முடியாது என விரட்டி விட்டார். இதனால் நாங்கள் போலீசாரிடம் புகார் கொடுக்க முடிவெடுத்தோம். அதனை தெரிந்து கொண்டவர் இரண்டு தடவை காசலைகள் வழங்கினார். அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாததால் திரும்ப வந்துவிட்டது. அவர் எங்கள் பகுதிக்கு வரும் பொழுது எல்லாம் மூன்று கார்களில் வந்து வசூல் செய்து விட்டு போவார். அவருடன் டிப் டாப்பாக விஜய சாரதி, மனோகரன் உடன் வருவார்காள். எங்களிடம் வசூல் செய்த பணத்தில் இரண்டு ஏக்கர் நிலம் மூன்றுக்கு மேற்பட்ட கார்கள் என வாங்கி குவித்துள்ளது தற்பொழுது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் இது குறித்து,எஸ்பி இடம் புகார் மனு அளித்தோம். இந்த புகார் குறித்து வெங்கமேடு போலீசார் மேற்கொண்டு விசாரிக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். அதனால் மீண்டும் எங்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி கரூர் எஸ்பி இடம் மனு கொடுக்க, வந்துள்ளோம் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.