Skip to content

நடிகர் சிவகார்த்திகேயன் மகனுக்கு, திருவாரூரில் காதணி விழா

நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியில்  வசித்து வந்தார். கல்லூரி படிப்பையும் திருச்சியில் தான் முடித்தார்.  சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும் முன்னரே ஆர்த்தி என்ற தனது மாமா மகளை திருமணம் செய்திருந்தார்.

இந்தத் தம்பதிக்கு ஆராதனா என்கிற மகளும் குகன் மற்றும் பவன் என்கிற இரு மகன்களும் உள்ளனர்.  நடிகர் சிவகார்த்திகேயன் தனது இளைய மகன் பவனுக்கு காதணி விழா நடத்தியுள்ளார். இந்த விழா  சிவகார்த்திகேயனின் பூர்வீக கிராமமான திருவாரூர் மாவட்டம்   நன்னிலம் அருகே  உள்ள திருவீழிமிழலையில் உள்ள  தனது பூர்வீக வீட்டில்  நடத்தினார்.  இந்த விழாவில்  நெருங்கிய உறவினர்கள் மற்றும்  கிராம மக்கள்  கலந்து கொண்டனர்.  கிராம மக்கள் சிவகார்த்திகேயனுடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

 

error: Content is protected !!