போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது..
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா செல்ல காத்திருந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்த போது அவர் தனது பெயரை மாற்றி பாஸ்போர்ட் பெற்று மலேசியா செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது அவருடைய உண்மையான பெயர் பழனிக்குமார் (வயது 46) மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பின்னர் இமிகிரேஷன் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிகுமாரை கைது செய்துள்ளனர் –
ஸ்ரீரங்கத்தில் வணிக வளாகத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு..
ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (50) இவர் அழகிரி புரம் சோதனை சாவடி அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள படிக்கட்டு கைப்பிடி கம்பியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து தல தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்துவிட்டார் . இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இலங்கை அகதிகள் முகாமில் மோதல்… வாலிபர் படுகாயம்
திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வருபவர் துசேந்திரன் (38 ). இவர் இதே முகாமில் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்கள் ரஞ்சித் குமார் ( 43) தினேஷ் ( 20) சதீஷ் மற்றும் விக்னேஷ் ( 24 ). இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில்
துசேந்திரன் மாடி படிக்கட்டில் ஏறும் பொழுது ரஞ்சித் குமார் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர்.
பின்னர் மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் குமார் மரக்கட்டையை எடுத்து து துசேந்திரனை தாக்கினார்.இந்த சம்பவத்தில் அவர் அவர் காயம் அடைந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து துசேந்திரன் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்துள்ளனர். தினேஷ்,சதீஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற ஜாமினில் விடுவித்தனர். சதீஷை தேடி வருகின்றனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.