Skip to content

அமெரிக்க பெண்ணுடன் காதல்… கரம்பிடித்த தமிழக நாசா விஞ்ஞானி….

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா அருக்காவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர், தனது மனைவி ஆதிரை மற்றும் தனது இரண்டு மகன்களுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் அவினாஷ், நாசாவில் அறிவியல் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், அவினாஷ் அமெரிக்காவில் வசித்து வரும் கேத்தரின் ஓசேவி என்பவரை காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது. தமிழ் கலாச்சார முறைப்படி பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்புடன் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

வெளிநாட்டில் வசித்தாலும் தங்கள் குலதெய்வ கோயிலில் மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என தனது மகனுக்கு தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மாப்பிள்ளையின் பெற்றோர் தெரிவித்தனர்.

error: Content is protected !!