சென்னை  கோடம்பாக்கம்  என்றால் ஒரு காலத்தில் சினிமாக்காரர்களைத் தான் நினைவுக்கு வரும்.   ஆனால் இப்போது  கோடம்பாக்கம் என்றால்  கோடம்பாக்கம் அரசு அரசு மேல்நிலைப் பள்ளி   தான் நினைவுக்கு வரும் அளவுக்கு  அந்த பள்ளியில்   அட்ராசிட்டி நடந்து வருவதாக   பெற்றோர்கள்  குமுறுகிறார்கள்.

அதுவும்  வேலியே பயிரை மேய்ந்த கதையாக  அனைத்து அட்ராசிட்டிக்கும் தலைமை ஆசிரியை மாலதியே காரணம்,  என்று   பெற்றோர்கள்  கொந்தளிக்கிறார்கள்.

இதனால் இந்த  பள்ளியில் கடந்த 2 மாதங்களாக அசாதாரண சூழல் நிலவுகிறது. பட்டதாரி ஆசிரியை மீனாட்சி, உடற்கல்வி ஆசிரியர் . சீனிவாசன் ஆகியோர் மீது பொய் புகார் கூறிய விவகாரத்தில் மாணவனின் தந்தையை தூண்டி விட்ட தலைமை ஆசிரியை மாலதி தொடர்ந்து பள்ளியையும், ஆசிரியர்களையும் இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த பள்ளிக்குள் அத்துமீறி ஒருவர் நுழைந்து ஆசிரியைகளை வீடியோ எடுத்து எடிட் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டது, ஆசிரியைகளை இழிவுபடுத்தியும், பள்ளியின் நற்பெயரைக் கெடுக்கும் வகையிலும் போஸ்டர்களை ஒட்டியது, யூடியூப் நடத்துபவர்கள் மற்றும் பிளாக்மெயில் செய்யும் சிலர் ஆசிரியர்களை மிரட்டும் வகையில் ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டது, பிளாக்மெயில் பத்திரிகைகளில் அரசாங்கத்தை இழிவுபடுத்தும் வகைகளில் செய்திகளை வெளியிடுவது போன்ற அத்தனை காரியங்களிலும் மறைமுகமாக தலைமை ஆசிரியர்  மாலதி ஈடுபட்டிருக்கிறார் என அனைத்து ஆசிரியர்களும் மாலதி மீது சரமாரி புகார் கூறுகிறார்கள்.

எத்தனை புகார்கள் வந்தாலும், தலைமை ஆசிரியை  போக்கில் எந்த மாற்றமும் இல்லை.

கடந்த  10.12.24  அன்று  தலைமை ஆசிரியை   மீது நடவடிக்கை எடுக்கக் கூறி 45 ஆசிரியர்கள் கையெழுத்திட்டு முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

இதன்பின்பும், பள்ளியில் சுமுகமான சூழலை ஏற்படுத்தி மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதற்குப் பதிலாக தலைமை ஆசிரியர்  மாலதி தொடர்ந்து பள்ளியை செயல்பட விடாமல் செய்து வருகிறார்.இதை அறிந்து பள்ளிக் கல்வி இயக்குனர், பள்ளிக் கல்வி இணை இயக்குனர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் இணைந்து 22.1.25 அன்று நேரடியாக விசாரணை நடத்தினர்.

தலைமை ஆசிரியர்  மாலதி மற்றும் ஆசிரியை மீனாட்சி, உடற்கல்வி ஆசிரியர் திரு. சீனிவாசன் ஆகியோரிடம் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. முடிவில், பள்ளியை சுமுகமான நிலைக்கு கொண்டு வருவதில் மட்டுமே தலைமை ஆசிரியர் ஈடுபட வேண்டும் என்றும், ஏற்கனவே மருத்துவ விடுப்பில் இருக்கும் மற்ற 2 ஆசிரியர்களும் எந்த பிரச்னையும் செய்யக் கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.

ஆனால், 23.1.25 அன்று தமிழ்வாணன்  என்ற  மாணவன் உள்ளிட்ட 4 மாணவர்களை (ஆசிரியர்கள் மீது புகார் கொடுத்தவர்கள்), தலைமை ஆசிரியர்  மாலதி தனது அறைக்கு வெளியில் தரையில் அமர வைத்து தேர்வு எழுதச் செய்துள்ளார். பின்னர், அவரே தமிழ்வாணனின் தந்தையை வரவழைத்து செல்போனில் படம் எடுத்து கொண்டு போகச் செய்துள்ளார்.

ஏற்கனவே ஆசிரியைகளை அவதூறாக சித்தரித்து வீடியோக்கள் வெளியிட்ட சமூக ஆர்வலர் என்று சொல்லிக் கொள்ளும் குபேந்திரன், அந்த படத்தை வெளியிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பட்டியலின மாணவர்களை அகதிகள் போல் தரையில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர் என்று பள்ளியை மேலும்மேலும் இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். லோகநாதனும், குபேந்திரனும் பல நாட்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியை யிடம்  மணிக்கணக்கில் பேசி விட்டு சென்றவர்கள் என்பது அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியும்.

ஆனால், தலைமை ஆசிரியை மாலதி தனக்கும், பள்ளியில் நடைபெறும் எந்த நிகழ்வுக்கும் தொடர்பே இல்லை என்று சொல்கிறார். அப்படியே எடுத்து கொண்டாலும், பாரம்பரியமிக்க அரசு பள்ளியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் 2 மாதமாக அவதூறான செய்திகள் வெளியாவதும், பள்ளிக்குள் அடிக்கடி பெற்றோர் வந்து சண்டை போடுவது, காவல்துறையினர் வந்து  செல்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கும் தலைமை ஆசிரியர் தானே பொறுப்பு ஏற்க வேண்டும். இப்படிப்பட்ட தலைமை ஆசிரியரை பணிமாற்றம் செய்வதற்கு ஏன் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தயங்குகிறார்கள்?

ஏற்கனவே. மாலதி காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் அரசு மாதிரிப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த போது, ஆங்கில முதுகலை ஆசிரியர்  ஆரோக்கியசாமி மீது  பாலியல் புகாரை முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி, அதை விசாரித்த மாவட்டக் கல்வி அலுவலர் அது பொய்ப் புகார் என்று அறிக்கை அளித்தார்.

இதைத் தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் இருவரும் லஞ்சம் வாங்கி விட்டதாக அங்கு ஒரு சமூக ஆர்வலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டார். அதேபோல், அந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் என்பவரை  மாலதி பணிநீக்கம் செய்தார்.  மாலதியின்  துன்புறுத்தலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 8 முதுகலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் வாங்கிச் சென்றுள்ளனர்.

ஒரு பெண் ஆய்வக உதவியாளர் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.இப்படி பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தலைமை ஆசிரியை , இப்போது பாரம்பரியமிக்க அரசு பள்ளியின் நிலை மோசமாகி வருவது தெரிந்தும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? தலைமை ஆசிரியைக்கு ஒரு மெமோ கூட கொடுக்க விடாமல்  தலைமைச் செயலகத்தில் இருந்து தடுப்பது ஒரு மேடம் என்று டி.பி.ஐ.யில் பேசுகிறார்கள். யார் அந்த மேடம்?

அரசு பள்ளிகளின் தரம்  மோசமாக உள்ளது என கவர்னர் ரவி அடிக்கடி  சொல்கிறாரே , இந்த கோடம் பாக்கம் பள்ளியை வைத்து தான்  கவர்னர் கூறுகிறார்  என்று  கோடம்பாக்கம் மக்கள் கூறுகிறார்கள்.

ஆனால் பள்ளிக்கல்வித்துறை ஏன் மாலதியை பார்த்து இப்படி பயப்படுகிறது என்பது தான் புதியாத  புதிராக இருக்கிறது என்று பெற்றோர்கள்  நொந்து கொள்கிறார்கள்.