ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே மக்கள் ஆர்வமாக வந்து வாக்களிக்கத் தொடங்கினர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே பல வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
முதல் இரண்டு மணி நேரத்தில், அதாவது காலை 9 மணிக்கு 10.85 சதவீத வாக்குகள் பதிவானது. அதே நேரத்தில் டில்லி சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணிக்கு 8.10 சதவீத வாக்குகளே பதிவானது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. இந்த வாக்குகள் 8ம் தேதி எண்ணப்படுகிறது.