Skip to content

கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் உதய குமார், சித்ரா தேவி மற்றும், 5 காவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாகனத்தில் தடை செய்யப்பட்ட  குட்கா பொருட்கள் இருந்தது. அவற்றை  பறிமுதல் செய்தனர்.  அத்துடன்  குட்காவை  கடத்தி வந்த  வட மாநில வியாபாரியிடம் இருந்த ரூ.  1. 25 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

ஆனால்   ரொக்கப்பணம் ரூ.1.25 லட்சத்தை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை.   இது குறித்து  அந்த வியாபாரி   உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து  விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பணத்தை  அவர்கள் பறிமுதல் செய்தது தெரியவந்தது.  அதைத்தொடர்ந்து  இன்ஸ்பெக்டர், 2 சப்இன்ஸ்பெக்டர்கள் உள்பட 8 பேரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி  டிஐஜி  வருண் குமார் உத்தரவிட்டார்.

error: Content is protected !!