Skip to content

டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

  • by Authour

70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம்699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.

டில்லியின் முதல்-மந்திரி அதிஷி கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும் மோதுகிறார்கள். இவர்கள் 2 பேரும் முன்னாள் முதல் மந்திரிகளின்  மகன்கள் ஆவார்கள். சந்தீப் தீட்சித், டில்லியில் நீண்டகாலம் முதல்-மந்திரியாக இருந்த ஷீலா தீட்சித்தின் மகன் ஆவார்.

டில்லி தேர்தலையொடடி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகம் போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கான நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏ.ஐ. கேமராக்களும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து பணியில் போலீசாருடன் சீருடை அல்லாத போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் டில்லி போலீசார், 22 ஆயிரம் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணி அளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி,   டில்லி முதல்வர் அதிஷி,  முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் வாக்களித்தனர். டில்லி தேர்தல் காலையிலேயே விறுவிறுப்புடன் காணப்பட்டது.  2  மணி நேரத்தில் டில்லி சட்டமன்றத்திற்கு 8.10 சதவீத வாக்குகள் பதிவானது.

 

error: Content is protected !!