Skip to content

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது..

இன்று நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, நாதக வேட்​பாளர்கள் உட்பட 46 வேட்​பாளர்கள் தேர்தல் களத்​தில் உள்ள நிலை​யில், 2.27 லட்சம் வாக்​காளர்கள் வாக்​களிக்க உள்ளனர். இங்கு எம்எல்​ஏவாக இருந்த ஈவிகேஎஸ்​.இளங்​கோவன் மறைவையடுத்து, இடைத்​தேர்தல் அறிவிக்​கப்​பட்​டது. அதிமுக, பாஜக, தேமு​திக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்​தலைப் புறக்​கணித்த நிலை​யில், இண்டியா கூட்டணி சார்​பில்திமுக வேட்​பாளர் வி.சி.சந்​திரகு​மார், நாம் தமிழர் கட்சி சார்​பில் சீ​தாலட்​சுமி போட்​டி​யிடு​கின்​றனர். பதிவு செய்​யப்​பட்ட அரசியல் கட்சி வேட்​பாளர்​கள், சுயேச்சை வேட்​பாளர்கள் என மொத்தம் 46 பேர் களத்​தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்​குப்​ப​திவு துவங்கியது. மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் வாக்​களிக்க வசதியாக 53 இடங்​களில் 237 வாக்​குச்​சாவடி மையங்கள் அமைக்​கப்​பட்​டுள்ளன. இவற்றுள் பதற்​ற​மானவை​யாகக் கண்டறியப்​பட்​டுள்ள 9 வாக்​குச்​சாவடி மையங்​களில் கூடுதல் பாது​காப்பு ஏற்பாடுகள் செய்​யப்​பட்டுள்ளன. வரும் 8-ம் தேதி சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி​யில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்​தால், ஈரோடு கிழக்கு தொகு​திக்கு உட்பட்ட அனைத்​துப் பகுதி​களுக்​கும் இன்று பொது விடு​முறை அறிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

error: Content is protected !!