திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியை அருகே மான்பாஞ்சாம்பட்டியில் வசித்து வருபவர் பாலசுந்தரம் (49) . விவசாயி ஆன இவர் காலை வீட்டை பூட்டி விட்டு துவரங்குறிச்சிக்கு குடும்பத்துடன் விசேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 8 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து துவரங்குறிச்சி போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். விசாரணைக்கு மோப்பநாய் வரவழைக்கபட்டு தடயங்கள் சேகரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…திருச்சி அருகே பரபரப்பு…
- by Authour