Skip to content

உபியில் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் சரக்கு ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பின்னால் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில், ரயிலின் பாதுகாப்பு பெட்டியும், என்ஜினும் தடம் புரண்டுள்ளன. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பிரயாக்ராஜில் இருந்து ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத்  துவங்கினர்.

விபத்துக்குப் பிறகு, டெல்லி-ஹவுரா ரயில் பாதையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட 2 ரயில்வே அதிகாரிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பொது, பலத்த காயமடைந்த 2 ஓட்டுநர்களும் ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே நிர்வாகம் விரைவில் தண்டவாளத்தை சரி செய்து வழக்கமான போக்குவரத்தை மீட்டெடுக்க முயற்சித்து வருகிறது. மேலும், விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!