ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய ரெயில் பாலம் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
தைப்பூச தினமான 11-ந் தேதியோ அல்லது அதற்கு முந்தைய நாளோ இந்த பாலத்தை திறக்க வாய்ப்புள்ளது என்றும் புதிய பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரும் 11ம் தேதி , பிரதமர் மோடி ராமேசுவரம் வருகிறார். பின்னர் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் இருந்து கப்பல் மூலம் பிரதமர் மோடி பாம்பன் வருகிறார். அங்கிருந்து கப்பலில் சென்று பழைய பாலம் மற்றும் புதிய பாலத்தை பார்வையிடுகிறார். பின்னர், புதிய ரெயில் பாலத்தை கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அந்த ரெயிலில் பயணம் செய்யும் வகையிலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி பல திட்டங்களை தொடங்கி வைக்கவும் ஏற்பாடு நடக்கிறது.