Skip to content

ரஞ்சிக்கோப்பை கால் இறுதி: தமிழ்நாடு அணி அறிவிப்பு

  • by Authour

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, விதர்பாவுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நாக்பூரில் நடைபெறுகிறது.  இந்த ஆட்டத்துக்கான 16 பேர் கொண்ட அணியை தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழுவினர்  அறிவித்தனர். இதில் இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் அணிக்கு திரும்பி உள்ளார். குடலிறக்கத்துக்காக அறுவை சிகிச்சை செய்திருந்த சுதர்சன் சுமார் 2 மாத காலத்துக்கு பின்னர் களத்துக்கு திரும்புகிறார்.

 சாய் கிஷோர் (கேப்டன்), நாராயணன் ஜெகதீசன், முகமது அலி, சாய் சுதர்சன், பூபதி வைஷ்ண குமார், விஜய் சங்கர், ஆந்த்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்ஜன் பால், முகமது, அஜித் ராம், சோனு யாதவ், திரிலோக் நாக், அச்யுத், லோகேஷ்வர், சித்தார்த், கோவிந்த்.

 

error: Content is protected !!