உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய இந்த கும்பமேளா வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. 40 கோடி பேர் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை 30 கோடிக்கும் அதிகமானவர்கள் நீராடி உள்ளனர்.
கடந்த வாரம் கூட்ட நெருக்கடி காரணமாக ஏற்பட்ட நெரிசலில் 30 பேர் பலியானார்கள். ஆனாலும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல் தொடர்ந்து நடந்து வருகிறது. நாளை(புதன்) காலை 11 மணி முதல் 11.30 மணிக்குள் பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தல் புனித நீராடுகிறார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.