தஞ்சாவூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் பூமால் ராவுத்தர் தெருவை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் சத்தியசீலன் (22). மளிகைக்கடை ஒன்றில் பொருட்களை டோர் டெலிவரி செய்பவராக பணியாற்றி வந்தார். இவரும், 17 வயது சிறுமியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த சிறுமியை திருமணம் செய்வதாக கோரி சத்தியசீலன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை புகைப்படம் எடுத்து தொடர்ந்து அந்த சிறுமி மிரட்டி தவறாக நடந்து வந்துள்ளார்.
சத்தியசீலனின் மிரட்டல் தாங்க முடியாமல் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சத்தியசீலன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உண்மை எனத் தெரிய வந்தது.
இதையடுத்து தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சத்தியசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.