திமுக செயற்குழு கூட்டத்தில் டிஆர் பாலு எம்.பி. ராகுல் காந்தியை விமர்சித்து பேசியதாக ஜூனியர் விகடன் வார இதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தி தவறானது. தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே தனக்கு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி தரவேண்டும் என ஜூனியர் விகடன் இதழ் மீது டிஆர் பாலு எம்.பி. வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி நக்கீரன், ஜூனியர் விகடன் இதழ் டிஆர் பாலுவுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க இன்று உத்தரவிட்டது.