Skip to content

பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. கைது..

தமிழக முழுவதும் இந்து முன்னணினர் திருப்பரங்குன்றம் மலை மீட்பு குறித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர் பொள்ளாச்சி இந்து முன்னணி நகரத் தலைவர் ரவி தலைமையில் சுப்பிரமணி சாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து கந்தசஷ்டி ப்ரயாணம் பாடி வழிபாடு செய்து கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை கண்டித்தும் பெண் சிவனடியார்கள் சங்கு ஊதி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திடீரென மூதாட்டி ஒருவர் தரையில் அமர்ந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்து அந்த மூதாட்டியை எழுந்து நிற்குமாறு கூறினர் இதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர் மேலும் பிஎஸ்என்எல் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

error: Content is protected !!