Skip to content

கலவரம், கட்டப்பஞ்சாயத்து செய்யும் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர்- துணைத்தலைவர் பகீர்

  • by Authour

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர்  நகராட்சி தலைவராக இருப்பtர்  பாத்திமா பஷீரா.  திமுகவை சேர்ந்தவர்.  இவா் மீது  நகராட்சி துணைத்தலைவர் சுதர்சன்(இந்திய கம்யூ) உள்பட 15  திமுக கவுன்சிலர்கள்,  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளனர்.  19ம் தேதி நம்பிக்கை  இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கிறது.

இது  குறித்து  துணைத்தலைவர் சுதர்சன்(இந்திய கம்யூ)  நகராட்சி ஆணையரிடம் கொடுத்த கடிதததில் கூறியிருப்பதாவது:

நகராட்சி தலைவர் பாத்திமா பஷிரா  ஊழல் செய்வதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்.  தனக்கு தேவையான  இடம் தவிர மற்ற இடங்களில் வேலை  நடைபெற தடை போடுகிறார்.  தனியாக ஒரு வாட்சப் குழு ஏற்படுத்தி  பல பிரிவினருக்கு இடையே கலவரம் ஏற்படுத்துகிறார்.

அதன் மூலம் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளையும் கையிலெடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்.  இதன் மூலம் அரசுக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்.

நகர்மன்ற  பணிகளை செய்வதற்கு  தலைவருக்கு  அரசு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தை தனது சொந்த உபயோகத்துக்கு    பாத்திமா பயன்படுத்துகிறார். சென்னைக்கு சொந்த வேலையாக செல்லும்போது  அரசு வாகனத்தில் தான் செல்கிறார்.

பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய  ஈமச்சடங்கு நிதி உதவி தொகையினை பெற தகுதி உடையவர்களை   தானே  தேர்வு செய்ய வேண்டும் என்று தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டி சமூக பிரச்னைகளை ஏற்படுத்துகிறார்.

தான் ஏற்றுக்கொண்ட பதவி பிரமாணத்திற்கு ,  அரசியல் சாசன உறுதி மொழிக்கு  மாறாக செயல்படுகிறார். இவர் தொடர்ந்து பதவியில் நீடித்தால்  தமிழக அரசுக்கு மிகப்பெரிய  களங்கம் ஏற்படும்.  எனவே  பாத்திமா பஷீராவுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறேன்.  அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு  வர  கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

error: Content is protected !!