தமிழக கூடுதல் டிஜிபியாக இருப்பவர் கல்பனா நாயக். இவர் சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த ஆண்டு பணியாற்றிய போது இவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், இது தன்னை கொல்ல நடந்த முயற்சி என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக இப்போது போலீசார் புதிய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். அதன்படி இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கல்பனா நாயக் புகாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அளித்துள்ள விளக்கத்தில், கல்பனா நாயக் புகார் அளித்தவுடன் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீயணைப்பு துறை, மின்துறை, தடயவியல் நிபுணர்கள் ஆகியோரிடம் இது குறித்து விளக்கம் பெறப்பட்டது.
அவர்கள் இது விபத்து என குறிப்பிட்டு உள்ளனர். எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் அல்ல’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
சீருடை பணியாளர் தேர்வாணையம் அளித்துள்ள விளக்கத்தில், கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் அளித்துள்ள புகாரில் உண்மை இல்லை. எஸ்.ஐ. தேர்வு முடிவுகள் முறைப்படி தான் நடந்தது என்று கூறி உள்ளது.